கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குமரகுரு, தொகுதிக்கு உட்பட்ட பாண்டூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதன் ஒருபகுதியாக பாண்டூர் கிராமத்திற்கு சென்ற குமரகுருவுக்கு, கிராம மக்கள் மலர்கள் தூவி, மாலை அணிவித்து, குதிரை நடனத்துடன் வரவேற்பு அளித்தனர். மேலும், அப்பகுதியில் பெருமளவில் திரண்ட ஆதரவாளர்கள் அவரை வீதி வீதியாக அழைத்து சென்று ஆதரவு தெரிவித்தனர்.
பாண்டூர், அரளி, உ.நெமிலி, காம்பட்டு, பாச்சபாளையம், ஆதனூர் உள்ளிட்ட பல கிராமங்களில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பின்போது, அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து வேட்பாளருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
பாண்டூர் கிராமத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பச்சை நிற புடவை அணிந்து, பூக்கள் தூவி, பிரம்மாண்ட மாலை அணிவித்து குமரகுருவை வரவேற்றது குறிப்பிடத்தக்கது. அப்போது பேசுகையில், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகளை எடுத்துக்கூறிய அவர், இந்த கிராமத்தில் மயானப் பாதை, சாலை வசதி மற்றும் குடியிருப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆறு மாதங்களுக்குள் செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கோரி, கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து குமரகுரு ஊர்வலமாக வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் அப்பகுதியில் தேர்தல் சூழலை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளன.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்,
தமிழக குரல்.

No comments:
Post a Comment